Friday 5 September 2014

கொத்தனூர் குழாயர்

கொற்றனூர் காணிப்பாடல் :

"காவல் குழாயன் கதித்த பெரியகுலன்
ஆவல்சேர் ஆந்தை அதிசேரன் - மேவியசீர்
செம்பூத்தன் செட்டியுடன் தென்கொற்றை மாநகர்க்கு
இன்புற்ற எழ்முதன்மை யே "

"ஞாயம் நிலைபெருக்கும் நற்கா வலன்குழையன்
நேயப் பெரியகுலன் நீள்ஆந்தை - ஆயன்
திருவளர் கொற்றைக்குச் சேரன்செம் பூதன்
பெருகுசெட்டி யும்காணிப் பேர் ".

பெரிய கூட்டத்து பட்டக்காரர் வேனாடுடையாரின் ஊராகிய கொற்றையூரில் (சங்கரண்டாம் பாளையம்) முதல் காணியாளர் குழாயர் கூட்டத்தினரே.

குழாயர் கூட்டம், பெரிய கூட்டம், ஆந்தை கூட்டம், சேரன் கூட்டம், செம்பூத்தன் கூட்டத்தினர் ஆகியோர் கொற்றனூரின் காணியளர்கள்..
இவர்கள் தவிர, காவலர் ஆகிய வேட்டுவரும், கொங்கு செட்டியாரும் கொற்றனூரின் காணியாளர்களே.

பெரிய கூட்டத்து வேணாடுடையார் கொற்றனூர் தலைவராக வரும்முன், குழாயர் கூட்டத்தினரின் நிர்வாகமே நடைபெற்றது. மூவேந்தர் வருகையின்போது அமரவதியாற்று வெள்ளபெருக்கால் குழாயர் கூட்ட கொற்றனூர் தலைவர்களான தேவண்ண கவுண்டரும், அவருடைய தம்பி கருப்பண்ண கவுண்டரும் நாடுகண் மேட்டுக்குத் திட்டிக் கிடாய் கொண்டு வரத் தாமதம் ஆனதால் வேணாடுடையார் தன் மகனைப் பலி கொடுத்தார் என்றும், அதனால் மிகிழ்ந்த மூவேந்தர்கள் கொற்றனூர் காணியையும், தென்கரை நாட்டு ஆட்சியையும் வேணாடர்க்கு அளித்தனர் என்று வரலாறு ஒன்று கூறப்படுகிறது. அதனால் காணியுரிமை பெற்ற பெரிய கோத்திர  வேணாடுடையார்க்குக் கீழ் பணி புரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.  அவர்களுக்கு கீழ் அங்கிருக்க விருப்பமில்லாமல், கொற்றனூர் குழாயர் உதியூர் மலைக்கு கிழக்கே உள்ள வௌவால் கொத்தனூர் என்னும் காட்டுபகுதியில் ஊர் அமைத்து, கோயிலும் ஏற்படுத்தினர். பல பேர் உடுமலை, பொள்ளாச்சி, பழனி, அட்டபாடி, பாலக்காடு போன்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.

வேணாடுடயாரை பாட்டுடைத் தலைவராக கொண்ட இரத்தின மூர்த்தி விறலி விடு தூதில்,

"வேண்டுபுகழ்க்
கோமான் குழாய குலத்தில் மிகஉதித்த
சீமான் பெரியண்ண தீட்சணன் "

என்று குழாயர் கூட்ட அரசரை குறிப்பிடபடுகிறது.

No comments:

Post a Comment